Redmi Note 8 Pro
இந்தியாவில், ரியல்மீயின் அசுர வளர்ச்சிக்குப் பிறகு கடும் போட்டியைச் சந்தித்து வருகிறது ஷியோமி நிறுவனம். குறிப்பாக, பத்தாயிரம் ரூபாய் முதல் இருபதாயிரம் ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் ரியல்மீ மொபைல்களை அதிகமாக விற்பனைக்குக் கொண்டுவருகிறது. இவை, ரெட்மியின் நோட் சீரிஸுக்குப் போட்டியாகவே இருப்பதால், அதைச் சமாளிக்கும் வகையில் ஷியோமி நிறுவனம் ரெட்மி நோட் 8 சீரிஸ் மொபைல்களைக் களமிறக்கியிருக்கிறது.
ரெட்மி நோட் 8 ப்ரோ கேமராக்களைப் பொருத்தவரை, பின்புறத்தில் 4 கேமராக்கள் உள்ளன. அதில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது. இரண்டாவது 8 மெகாபிக்சல் கேமரா; மூன்றாவது 2 மெகாபிக்சல் கேமரா மற்றும் நான்காவது 2 மெகாபிக்சல் கேமரா. பின்புற கேமரா அமைப்பில் ஆட்டோஃபோகஸ் உள்ளது. முன்புற கேமரா பொறுத்தவரையில் 20 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது.
மெமரி கார்டு ஸ்லாட்டுடன் வெளியாகும் முதல் நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் இதுதான். 4500 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 18W சார்ஜிங் வசதியும் இதில் இருக்கிறது. அதற்கான சார்ஜரும் உடன் கொடுக்கப்படுகிறது. அமேஸான் நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டென்டான அலெக்ஸாவை இதில் முதல் முறையாகக் கொடுத்திருக்கிறது ஷியோமி. ரெட்மி நோட் 8 ப்ரோவின் 6GB+64GB வேரியன்ட் 14,999 ரூபாய்க்கும், 6GB+128GB வேரியன்ட் 15,999 ரூபாய்க்கும் மற்றும் 8GB+128GB வேரியன்ட் 17,999 ரூபாய்க்கும் கிடைக்கும்.
வாங்க : https://amzn.to/2J6l9WJ